März 28, 2024

இலங்கையில் நடைபெற்றதை இனப் படுகொலையாகத்தான் பார்க்கவேண்டும் – ஜெனீவாவில் தமிழர் தரப்பு

இன்று திங்கட்கிழமை 12ஆம் திகதி ஜெனிவாவில் உள்ள ஐ. நா மனித உரிமை சபையின் முன் அமைத்துள்ள முருகதாசன் திடலிலே மதியம் 2 மணி 30 நிமிடத்திற்கு ஆரம்பமான ஒன்றுகூடல் மிக சிறந்த முறையிலே நிறைவுபெற்றுள்ளது. 
இவ் ஒன்றுகூடலில் இனப் படுகொலையின் ஆதாரப் புகைப்படங்கள்  சுமார் 12 மீற்றர் நீள மேடையில் சாட்சியங்களாக நின்றது.
தாயகத்திலிருந்து வருகைதந்த எமது தமிழ் அரசியல் பிரதிநிதிகள் ஐ.நா மனித உரிமை சபையிடம் பல கோரிக்கைகளை கையளித்தனர்.
அக் கோரிக்கைகளில் இனப் படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்றும், இலங்கையில் நடைபெற்றது இனப் படுகொலையாகத்தான் பார்க்க வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளடங்களாக மேலும் பல கோரிக்கைகளையும் கையளித்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
ஒன்றுகூடலில் முன்னாள் வடமாகாணசபை அமைச்சர் அனந்தி சசிதரன், யாழ்ப்பாண மாநகரசபை மேயர் மணிவண்ணன், மட்டக்களப்பு மாநகரசபை மேயர் தியாகராசா , அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert