März 29, 2024

முன்னாள் மலேசியப் பிரதமரின் மனைவிக்கு 10 வருட சிறை!!

மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் ஆட்சிக் காலத்தில் அவரது மனைவி ரோஸ்மா மன்சோர் பள்ளிகளுக்கு சூரிய சக்தி மின்சாரம் வழங்குவது தொடர்பான ஒப்பந்தங்களில் ஊழல் செய்தது உறுதியான நிலையில், அவருக்கு அபராதமும், 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மலேசியாவின் முன்னாள் முதல் பெண்மணி ரோஸ்மா மன்சோர், அரசாங்க ஒப்பந்தங்களை வழங்குவதற்கு லஞ்சம் கேட்டு பெற்றதற்காக குற்றம் சாட்டப்பட்டிருந்தார். இதனைத்தொடர்ந்து 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையையும், 216 மில்லியன் அமெரிக்க டாலர் அபராதமும் முன்னாள் பிரதமரின் மனைவிக்கு தண்டனையாக வழங்கப்பட்டுள்ளது. இந்த அபராதத் தொகை மலேசிய நீதிமன்ற வரலாற்றில் இதுவரை விதிக்கப்படாத அளவு மிகப் பெரிய அபராதத் தொகையாகும்.

அரசுத் தரப்பு நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி தங்கள் தரப்பை நிரூபித்துள்ளது என்று கோலாலம்பூர் ஐகோர்ட்டு நீதிபதி மொஹமட் ஜைனி மஸ்லான் கூறினார். அரசு முதலீட்டு நிறுவனமான எம்டிபியில் ஊழல் செய்தது தொடர்பாக மன்சோரின் கணவரும், முன்னாள் பிரதமருமான நஜிப் ரசாக்கிற்கு ஏற்கனவே 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert