April 25, 2024

கிளிநொச்சி போராட்டத்தின் கோரிக்கைகள்!

கையளிக்கப்பட்டும்,சரணடைந்தும்,கடத்தப்பட்டும்,விசாரணைக்கெனக் கூட்டிச் செல்லப்பட்டும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளைத் தேடி வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளாகிய நாம் கடந்த 2000 நாட்களாக நீதி இன்றி போராடி வருகின்றோம். ஆரம்பத்தில் இலங்கை அரசிடம் நீதியை எதிர்பார்த்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரி சிறிசேனவை சந்தித்து நீதி கோரியபோது அவர் கொடுத்த வாக்கை நிறைவேற்றாது எம்மை ஏமாற்றியிருந்தார். இதன் காரணமாகவும் சிறிலங்காவின் நீதித்துறையின் ”சிங்களவர்க்கு ஒரு சட்டம், தமிழருக்கு ஒரு சட்டம்“ என்ற இனத்துவேச அணுகுமுறை காரணமாகவும் (உ.ம் கொலை குற்றசாட்டு நீதிமன்றத்தால் நிரூபிக்கபட்ட சிங்கள இராணுவத்திற்கு சிறிலங்கா முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய இராயபக்ச பொது மன்னிப்பு வழங்கி பதவி உயர்வும் வழங்கியுள்ளார். இது போல பல உதாரணகள் உண்டு )  சிறிலங்கா அரசிடம் நீதி கிடைக்காது என்ற முடிவுக்கு வந்து சர்வதேசத்திடம் மட்டுமே நீதி கேட்டு போராடி வருகிறோம். எம்முடன் இப்போராட்டத்தில் இணைந்திருந்த 138 மேற்பட்ட பெற்றோர்கள்  தமது பிள்ளைகளின் நிலை அறியாமலும், நீதி கிடைக்காமலும் இறந்து விட்டனர். நாமும் எமது வயோதிப காலத்தில் நோய்வாய்ப்பட்டு உடல் இயலாத நிலையிலும்  சர்வதேசத்தில் நம்பிக்கை வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றோம். 

எமது உறவுகளில் பெருந்தொகையானோர் 2009 இறுதி யுத்தத்தின் போது சரணடைந்தும், கையளிக்கப்பட்டும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள், உயிரோடு கையளித்த சரணடைந்த  உறவுகளை இறந்து விட்டதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாய  இரக்கமின்றி அறிவித்தார். இதில் 29ம் மேற்பட்ட கைக்குழந்தைகளும் சிறுவர்களும் அடங்குவர். எமது உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டதில்  பாதுகாப்புச் செயலராக இருந்து, கட்டளைகளை வழங்கி திட்டமிட்டு  இனவழிப்பை மேற்கொண்டதில் இவருக்கு பெரும் பங்கு உண்டு. தானே பாதுகாப்பு செயலராக இருந்து மனிதகுலத்திற்கு எதிரான யுத்தம் மூலம் தமிழின அழிப்பை மேற்கொண்டவர் இவரே. இவரின் இவ்வளவு அட்டுழியங்களுக்கும் இவரது சகோதரராகிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக இருந்து சகல வழிகளிலும் இவ் இனவழிப்பு யுத்தத்திற்கு முழு அதிகாரமும் கொடுத்து முன்னின்று வழிநடத்தினார். இவருக்கு துணையாக இவரது நம்பிக்கைக்குரிய படைத் தளபதிகளும், சிங்கள அதிகாரிகளும் தமிழரை சித்திரவதை செய்து, கொன்று, கற்பழித்து, ஊனமாக்கி,தமிழரின்  சொத்துக்களை  கொள்ளையடித்து  எம் இனத்தை இனவழிப்பு செய்தனர்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert