April 20, 2024

புதிய ஜனாதிபதி தெரிவு எவ்வாறு?

கோத்தபாய ஜனாதிபதி கதிரையிலிருந்து தூக்கியெறியப்பட்ட பின்னராக புதிய ஜனாதிபதி தெரிவு எவ்வாறு அமையுமென தகவல்கள் வெளிவந்துள்ளது.

அரசியலமைப்பின் 38வது சரத்தின் (1) உப சரத்துக்கு அமைய ஜனாதிபதிப் பதவி வெற்றிடமாகும் சந்தர்ப்பத்தில் அரசியலமைப்பின் 40வது சரத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமைக்கு அமைய பதவியை வறிதாக்கிச் செல்லும் ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவுறாது எஞ்சியுள்ள காலத்துக்கு மாத்திரம் அப்பதவியை வகிப்பதற்கு பாராளுமன்றத்தினால் அதிலுள்ள உறுப்பினர்களில் ஜனாதிபதிப் பதவிக்குத் தேர்ந்தெடுப்பதற்குத் தகுதி உள்ள ஒருவர் ஜனாதிபதியாகத்  தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

இதன்போது இந்தத் தெரிவு 1981ஆம் ஆண்டு 02ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல்கள் (சிறப்பேற்பாடுகள்) சட்டத்தைப் பின்பற்றியதாக அமைந்திருக்கும்.

விசேடமாக இந்த நடைமுறை பாராளுமன்ற செயலாளர் நாயகத்தின் தலைமையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதுடன், வாக்கெடுப்பின் போது சபாநாயகரும் வாக்களிப்பார். அத்துடன் இந்த நடைமுகைளுக்காக பாராளுமன்றம் மூன்று நாட்கள் கூடும்.

அதன்படி, சட்ட விதிகளுக்கு உட்பட்டதாக இந்தத் தேர்தலை நடத்துவதற்குப் பின்வரும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

● இதில் ஜனாதிபதிப் பதவி வெற்றிடமான திகதிக்குப் பின்னர் இயன்றளவு விரைவாகவும், எச்சந்தர்ப்பத்திலும் அத்திகதியிலிருந்து ஒரு மாதத்திற்குப் பிந்தாமலும்  இந்தத் தெரிவு நடாத்தப்படுதல் வேண்டும்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert