März 19, 2024

லிபியாவில் பராளுமன்றத்திற்கு போராட்டக்காரர்கள் தீ வைப்பு

லிபியாவின் கிழக்கு நகரமான டோப்ரூக்கில் அமைந்துள்ள பாராளுமன்றத்தை போராட்டக்காரர்கள் தாக்கி, கட்டிடத்தின் ஒரு பகுதிக்கு தீ வைத்துள்ளனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் வெளியில் டயர்களை எரித்ததால்,  அடர்த்தியான புகை மண்டலங்கள் எழுந்தன

தொடரும் மின்வெட்டு, விலைவாசி உயர்வு மற்றும் அரசியல் முட்டுக்கட்டைக்கு எதிராக மற்ற லிபிய நகரங்களில் பேரணிகள் நடந்துள்ளன.

தலைநகர் திரிபோலியில், போட்டி நிர்வாகம் ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், போராட்டக்காரர்கள் தேர்தலுக்கு அழைப்பு விடுத்தனர்.

இக்கோரிக்கைக்கு  இடைக்கால அரசாங்கத்தின் தலைவரான அப்துல் ஹமீட் டிபீபா ஆதரவு அளித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் லிபியா தூதர் ஸ்டெபானி வில்லியம்ஸ் வன்முறை ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கூறினார், ஆனால் இது அரசியல் வர்க்கத்திற்கான தெளிவான அழைப்பு என்று வர்ணித்தார். தங்கள் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு லிபிய மக்கள் விரும்பும் தேர்தலை நடத்தினார்

தேர்தல் முடிவடைந்த ஒரு நாளுக்குப் பின்னரே இந்த அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

2011 ஆம் ஆண்டு நேட்டோ ஆதரவு கிளர்ச்சியால் லிபியாவில் நீண்டகாலமாக ஆட்சியில் இருந்த கர்னல் முயம்மர் கடாபியை பதவி நீக்கம் செய்ததில் இருந்து குழப்பத்தில் நீடித்து வருகிறது.

லிபியா எண்ணெய்வளம் நிறைந்த நாடு. கடாவியின் காலத்தில் ஆப்பிரிக்காவில் இலவச சுகாதாரம் மற்றும் இலவசக் கல்வியுடன் மிக உயர்ந்த வாழ்க்கைத் தரங்களில் ஒன்றாக இருந்தது. அது தற்போது சிதைந்துவிட்டது. டிரிபோலி போட்டிப் படைகளுக்கு இடையே அடிக்கடி சண்டை நடந்து வருகிறது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert