April 22, 2024

தப்பியவர்களுள் 232 அகப்பட்டனர்!

இறுதி யுத்த நடவடிக்கைகளில் சரணடைந்த முன்னாள் போராளிகளது சித்திரவதை கூடமாக உருவாகி தற்போது சிங்கள போதைபொருள் பயனாளர்களது புனர்வாழ்வு மையமாக உள்ள பொலநறுவை கந்தகாடு  மையத்திலிருந்து தப்பித்து சென்றவர்களை கைது செய்வதில் முப்படைகள் களமிறக்கப்பட்டுள்ளன.

கந்தக்காடு புனர்வாழ்வு முகாமிலிருந்து தப்பிச்சென்றவர்களில் 232 பேர் பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

கந்தக்காடு புனர்வாழ்வு முகாமிலிருந்து நேற்றிரவு இடம்பெற்ற மோதலின் போது, புனர்வாழ்வு பெற்றுவந்த 500இற்கும் மேற்பட்டோர் வேலிகளை உடைத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இம் மோதல் சம்பவத்தின்போது, புனர்வாழ்வளிக்கப்பட்டு வந்த கைதி ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார்.

தப்பியோடியவர்களைக் கண்டுபிடிக்க இராணுவமும் பொலிஸாரும் இணைந்து தொடர்ந்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert