April 24, 2024

வணிக நிலைய வளாகம் மீது ஏவுகணைத் தாக்குதல்: 10 பேர் பலி! 40 பேர் காயம்!

உக்ரைன் பொல்டாவா பகுதியில் அமைந்த கிரெமென்சுக்கில் வணிக நிலைய வளாகம் மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதலைத் நடத்தியது.

இன்று திங்கட்கிழமை பிற்பகல் நடத்திய இரண்டு ஏவுகணைத் தாக்குதல்களில் குறைந்தது 10 பேர் உயிரிழந்ததுடன் மேலும் 40 பேர் காயமடைந்தனர்.

இந்த வணிக நிலைய வளாகத்தில் 1,000 க்கு மேற்பட்டவர்கள் அங்கிருந்ததாக பிராந்திய நிர்வாகத்தின் தலைவர் பொல்ராவா கூறுகினார். 

வெளியான புகைப்படங்கள் மற்றும் காணொளிக் காட்சிகள் வணிக நிலைய வளாகம் முற்றாக தீயில் மூழ்கியதைக் காட்டுகிறது.

சம்பவத்தை அடுத்து அவரசாகல பணியாளர்கள் மற்றும் வழிப்போக்கர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இத்தாக்குதல் குறித்து உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இது கற்பனையிலும் நினைத்துப்பார்க்க முடியாதது என்று தனது டெலிகிராமில் கூறியுள்ளார்.

ஆம்ஸ்டர் ஷாப்பிங் சென்டர் ரஷ்ய இராணுவத்திற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை மற்றும் எந்த மூலோபாய திட்டங்களும் இல்லை. தாக்குதலின் நோக்கம் ஒரு சாதாரண வாழ்க்கை வாழும்  மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிப்படையச் செய்வதே. இது ஆக்கிரமிப்பாளர்களை மிகவும் கோபப்படுத்துகிறது என்று அவர் மேலும் கூறினார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert