März 28, 2024

கொலையாளிகளிற்கு பிணை:சாட்சி புலிக்கு சிறை!

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவை கடத்தி வந்து சிறையில் அடைத்தமை தொடர்பில் சாட்சியளித்த முன்னாள் போராளியை சிறையிலடைத்துள்ளது இலங்கை நீதித்துறை.

அதேவேளை  பிரகீத் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒன்பது இராணுவ புலனாய்வு அதிகாரிகளை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளியான சுரேஸ் என்பவரும் சாட்சியாக இருந்தார். குறித்த உறுப்பினரை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தில் பொய் சாட்சியம் அளித்ததே இதற்குக் காரணமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

சஞ்சீவ மொரேஸ் (தலைவர்), தமித் தோட்டவத்த மற்றும் மஹேன் வீரமன் ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

பிரகீத் கடத்தி மின்னேரியா முகாமிற்கு கொண்டுவரப்பட்டு கொலை செய்யப்பட்ட போது விடுதலைப்புலிகள் போராளியான சுரேஸ் அவரை சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert