März 28, 2024

ராஜபக்சக்கள் வீடு செல்வதே நல்லது:மைத்திரி!

இலங்கையில்  தற்போதைய அரசாங்கம் மாறினால் மாத்திரமே, இலங்கையை அபிவிருத்தி செய்ய முடியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் ஜென்ஹாங் உடனான சந்திப்பின் பின்னர் பொலன்னறுவையில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இடைக்கால அரசாங்கம் அமைத்து பொதுத் தேர்தலை நடத்தினால் மாத்திரமே இலங்கைக்கு வெளிநாடுகள் மற்றும் அமைப்புகளின் ஆதரவைப் பெற முடியும்.

உர விநியோகம், எரிபொருள் தட்டுப்பாடு, உணவு உற்பத்தி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் நாடு வீழ்ச்சியடைந்துள்ளது.

பொருளாதார நெருக்கடியால் இலங்கைக்கு ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள சீனாவின் ஆலோசனைகள் தொடர்பிலும் இருவரும் இதன் போது கலந்துரையாடியுள்ளனர்.

தற்போதைக்கு 15 அமைச்சர்களைக் கொண்ட சர்வகட்சி இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்றும், அதன் பின்னர் பொதுத் தேர்தலை நடத்தி மக்களின் ஆணையைப் பெற வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்க்கட்சியில் அமர்ந்து கொண்டு தற்போதைய அரசாங்கம் கொண்டு வரும் அனைத்து நன்மை பயக்கும் சீர்திருத்தங்களுக்கும் தமது கட்சி ஆதரவளிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert