April 20, 2024

மும்முரமாகியுள்ள பஸில் தரப்பு!

மீண்டும் முனைப்புடன் செயற்பட்டுவரும் ராஜபக்ச தரப்பு திரைமறைவில் தமக்கான கட்டமைப்புக்களை வலுப்படுத்த தொடங்கியுள்ளது.

21வது திருத்தத்தை எதிர்ப்பதற்காக ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் பல நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பசில் ராஜபக்ச பெற்றுள்ளார் என அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எனினும் 21 வது திருத்தம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் பல நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற முடியும் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

21வது திருத்தம் ஏற்கனவே அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது,அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுடனான ஆலோசனையின் பின்னர் அது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

வெள்ளிக்கிழமை அனைத்து கட்சி தலைவர்களுடன் இது குறித்து விவாதிக்கவுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவை பெறுவதற்காக அந்த கட்சியுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக அரசவட்டாரங்கள் தெரிவித்தன.

புதிய நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவே 21 வது திருத்தத்தை வடிவமைக்கும் நடவடிக்கைகளில் முக்கியமாக ஈடுபட்டுள்ளார்,அவர் பல அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு அவர்களின் கருத்தினை பெற்றுவருகின்றார்.

21வது திருத்தத்தின் நகல்வடிவம் இறுதி ஆவணமில்லை அது திருத்தத்திற்கு உட்படக்கூடியது என விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert