நல்லாட்சி செல்வம் நன்றி சொன்னாராம்?

தமிழ்நாட்டு உறவுகள் இலங்கை மக்களுக்கு தங்களுடைய உறவுகள் பட்டினி இருத்தல் கூடாது என்ற நோக்கத்தோடு அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைத்திருப்பதற்கு நன்றி தெரிவித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் .

உதவிகளிற்காக தமிழ்நாட்டு மக்களுக்கும் தமிழ்நாட்டு முதலமைச்சர் தமிழ்நாட்டின் சட்டசபை உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் ஒரு சிறுமி தனக்கு சைக்கிள் வாங்குவதற்காக சேமித்து வைத்திருந்த பணத்தை இலங்கை மக்களுக்காக வழங்கியிருந்தார். அதேபோல் தேநீர் கடை நடத்தும் ஒரு நபர் தான் வழங்கும் தேநீரை கொடுத்து தேனீரை பெற்றுக் கொள்பவர் தங்களால் முடிந்த அளவு இலங்கை மக்களுக்கு வழங்கும் பணத்தினை இலங்கை மக்களுக்கு அனுப்ப உள்ளார்.

அதேபோல் அன்றாடம் யாசகம் பெறும் ஒரு முதியவர் கூட தன்னுடைய பணத்தை எங்களுடைய மக்களுக்கு வழங்குவதற்கு முன் வந்திருந்தார். இதுதான் தமிழ்நாட்டு மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் ஆன தொப்புள் கொடி உறவு ஆகுமெனவும் செல்வம் தெரிவித்துள்ளார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert.