சிங்கள இளைஞர்களிற்கும் புனர்வாழ்வு?

கோட்டா கோ கம மீது மே 9 ம் திகதி இடம்பெற்ற தாக்குதல்கள் குறித்த விசாரணைகளில் இருந்து நாங்கள் தப்பியோடப்போவதில்லை என நாமல் ராஜபக்ச நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

விசாரணைகளிற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

சிஐடியினர் பெயர் வெளியிட்ட அனைவரும் சரணடைந்துள்ளனர்  அல்லது வாக்குமூலம் வழங்கியுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்சி அரசியல் பேதமின்றி வன்முறைகள் படுகொலைகள் போன்றவற்றில் ஈடுபட்டவர்களிற்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இல்லாவிட்டால் சமூகம் குழப்பத்தில் சிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

இரு குழுக்கள் இந்த வன்முறைகளின் பின்னணியில் உள்ளன என தெரிவித்துள்ள நாமல் ராஜபக்ச திட்டமிட்ட குழு அரசியல் நோக்கத்துடன்  குழுக்கள் வன்முறையை தூண்டின அதனால் தூண்டப்பட்ட இளைஞர்கள் வன்முறையில் ஈடுபட்டார்கள் எனகுறிப்பிட்டுள்ளார்.

வன்முறைகளை நோக்கி வழிநடத்தியவர்களிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் இளைஞர்களை புனர்வாழ்விற்கு உட்படுத்தவேண்டும் எனஅவர் தெரிவித்துள்ளார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert.