கோத்தா-மகிந்தவுடன் ரணிலும் முன்வரிசையில்

போனஸ் ஆசனத்தில் தனியாளாக வந்திருந்த ரணில் தற்போது ஆளும் தரப்பின் முன்வரிசைக்கு வந்துள்ளார்.

தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் புதிய பிரதமர் நியமிக்கப்பட்டதன் பின்னர் முதல் தடவையாக இன்று (17) பாராளுமன்றம் கூடவுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஆசனப் பங்கீட்டிலும் இன்று மாற்றம் செய்யப்படவுள்ளதுடன், இதுவரையில் எதிர்க்கட்சியில் இருந்த ரணில் விக்கிரமசிங்க இன்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுடன் ஆளும் கட்சயில் பிரதமரின் ஆசனத்தில் அமரவுள்ளார்.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஆளும் கட்சியில் முன்வரிசை ஆசனம் ஒதுக்கப்படவுள்ளது.

இதேவேளை, நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவின் விசேட கூட்டம் இன்று காலை 8.30 மணிக்கு கூட்டப்பட்டுள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert.