இலங்கை பொலிஸ் போதும்:ஆமி தேவையில்லை!

தமிழ் அரசியல்வாதிகளது வதிவிடங்களிற்கும் இராணுவ பாதுகாப்பு வழங்க அரசு முற்பட்டுள்ள நிலையில் பெரும்பாலான தமிழ் அரசியல்வாதிகள் தமக்கான மேலதிக இராணுவ பாதுகாப்பை மறுதலித்துவருகின்றனர்.

தனது யாழ்ப்பாண  இல்லத்திற்கு பாதுகாப்பு என்னும் பெயரில் இல்லத்திற்கு முன்பாக நிலைநிறுத்தப்பட்டுள்ள இராணுவத்தை உடன் அகற்றுமாறு கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாதுகாப்பு என்னும் பெயரில் இராணுவத்தினர் நிற்பது இயல்பு வாழ்வை பாதிப்பதாகவே இருப்பதனால் உடன் இராணுவத்தை அகற்றுமாறு சி.சிறீதரன் கோரியுள்ளார்.

முன்னதாக கடந்த ஆண்டில் 12வருடங்களாக வழங்கப்பட்டுவந்திருந்த காவல்துறை பாதுகாப்பு காரணங்களின்றி விலக்கப்பட்டமையினை சுட்டிக்காட்டிள்ள சி.சிறீதரன் காவல்துறை பாதுகாப்பை மீள வழங்குமாறு பல தடவைகள் கோரிக்கை விடுத்திருந்த போதும் கண்டுகொள்ளப்பட்டிருக்கவில்லையெனவும் தெரிவித்துள்ளார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert.