April 24, 2024

ரணிலுக்கு கண்டம்:மே17 இல் தாண்டுவாரா?

ரணில் அமைச்சரவையில் சுதந்திரக்கட்சியும் இணையாதென அறிவித்துள்ள நிலையில் ரணில் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளார். 

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமித்து புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் மற்றுமொரு அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையினரின் நம்பிக்கையைப் பெறுவதில் கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளார்.

எதிர்க்கட்சியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் புதிய பிரதமருக்கு ஆதரவளிக்க மறுத்துள்ளன.

நாட்டில் அராஜகத்தை ஆதரிக்க மாட்டோம் என்றும், அரசு எடுக்கும் நல்ல முடிவுகளுக்கு மட்டுமே ஆதரவளிப்போம் என்றும் அந்தக் குழுக்கள் கூறியுள்ளன.

இதேவேளை, எதிர்வரும் 17ஆம் திகதி நாடாளுமன்றம் மீண்டும் கூடியதன் பின்னர், பிரதமர் தமக்கு நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என கட்சி எம்.பி.க்கள் குழுவொன்று முன்மொழிவதற்குத் தயாராகி வருகிறது.

பிரதமர் தம் மீதான நாடாளுமன்றத்தின் நம்பிக்கையை உறுதிப்படுத்துவது வழமை என்பதால், இந்தப் பிரேரணை பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert