April 18, 2024

பேச்சுவார்த்தையில் முக்கிய திருப்பம்! நடுநிலை நிலையை ஏற்க உக்ரைன் சம்மதம்!

உக்ரைன்  மற்றும்  ரஷ்யா இடையே இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை துருக்கி இஸ்தான்புல் நகரில் நடபெற்றது.  

இந்நிலையில், இந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டிற்குத் தகுந்த பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்கினால், அதற்கு ஈடாக நடுநிலை நிலையை ஏற்க உக்ரைன் சம்மதம் தெரித்துள்ளது.

அதாவது உக்ரைன் நேட்டோ அமைப்பிலும் சேராது. மேலும் உக்ரைனில் நேட்டோ அமைப்பின் இராணுவ தளங்களை அமைக்கவும் அனுமதி தராது என்று உக்ரைன் தரப்பில் பேச்சுவார்த்தையில் கூறப்பட்டுள்ளது. 

அதேபோல உக்ரைன் நாட்டில் இருக்கும் இராணுவத்தைக் குறைக்கவும் ரஷ்யா ஒப்புக் கொண்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 

உக்ரைன் போர் தொடங்கியதில் நேட்டோ விரிவாக்கம் முக்கிய காரணமாக இருந்த நிலையில், இப்போது உக்ரைன் நாட்டின் இந்த நிலைப்பாடு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

உக்ரைன் பாதுகாப்பு உத்தரவாதங்களைத் இப்போது கேட்கிறது. இதன்படி உக்ரைன் நாட்டிற்கு போலந்து, இஸ்ரேல், துருக்கி மற்றும் கனடா ஆகியவை பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கும் நாடுகளாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

இந்தப் பேச்சுவார்த்தை குழுவில் இடம் பெற்றிருந்த ஒலெக்சாண்டர் சாலி கூறுகையில், இவை எங்களுக்கு (உக்ரைன்) மிகவும் அடிப்படையானவை. இந்த முக்கிய விதிகளை நாங்கள் ஒருங்கிணைக்க முடிந்தால், உக்ரைன் நிரந்தர நடுநிலைமையுடன் இருக்க முடியும்‘ என்றார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert