April 24, 2024

உள்ளக விளையாட்டு அரங்கம் அமைக்க இரண்டு கோடி வழங்கிய வர்த்தகப் பெருமகன் AMR முத்தையா இராஜகோபால் அவர்கள்

யாழ்ப்பாணம் கல்வியங்காடு ஞானபாஸ்கரோதய சங்கத்திற்கு உள்ளக விளையாட்டு அரங்கம் அமைக்க இரண்டு கோடி ரூபாய்கள் வழங்கிய மொன்றியால் வர்த்தகப் பெருமகன் AMR முத்தையா இராஜகோபால் அவர்கள்-

„முத்தையா இராஜேஸ்வரி“ ஞாபகார்த்த உள்ளக விளையாட்டு விளையாட்டு அரங்கு என்ற பெயரில் தனது தாயாரின் நினைவாக யாழ்ப்பாணம் கல்வியங்காடு ஞானபாஸ்கரோதய சங்கத்திற்கு உள்ளக விளையாட்டு அரங்கம் அமைக்க இரண்டு கோடி ரூபாய்கள் வழங்கிய மொன்றியால் வர்த்தகப் பெருமகன் AMR ஏ,எம்.ஆர் முத்தையா இராஜகோபால் அவர்கள் அதனை தனது துணைவியார் சகிதம் அதனை திறந்து வைத்த பிரமாண்டமான நிகழ்வு கடந்த 06-03-2022 அன்று மாலை 6.00 மணிக்கு கல்வியங்காட்டில் சிறப்பாக நடைபெற்றது.யாழ்;பபாணம் அரசாங்க அதிபர் க. மகேசன் அவர்கள் சார்பாக பிரதமவிருந்தினராக கலந்து கொண்ட திரு மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இடம் பெற்ற இந்த அற்புதமான திறப்பு விழாவில் விழாவில் கோப்பாய் பிரதேச செயலாளர் திருமதி எம் சுபாசினி , வலி வடக்கு பிரதேச சபைத் தலைவர் திரு நிரோஸ் தியாகராஜா கிராம அலுவலர் திரு எஸ் தயாபரன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு சுரேஸ் பிரேமச் சந்திரன் யாழ்ப்பாண நகர பிதா திரு விசுவலிங்கம் மணிவண்ணன் , முன்னாள் வடக்கு மாகாண விவசா அமைச்சரும் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவருமான பொன்னுத்துரை ஐங்கரநேசன், கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஆர். என். லோகேந்திரலிங்கம், கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வெரகெதர உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்ட இந்த திறப்விழாவில் மொன்றியால் ஏஎமஆர் வர்த்தக நிறுவன நிலையத்தின் அதிபரும் உள்ளத விளையாட்டு நிலையம் அமைக்க இரண்டு கோடி ரூபாய்கள் வழங்கியவருமான AMR முத்தையா இராஜகோபால் அவர்கள் தனது துணைவியார் திருமதி பராசக்தி சகிதம் நாடாவை வெட்டி உள்ளக விளையாட்டு நிலையத்தை திறந்து வைத்தார்.மேற்படி விழாவிற்கு கல்வியங்காடு வாழ் பொது மக்கள் உட்பட AMR முத்தையா இராஜகோபால் அவர்கள் குடும்பத்தினர் உறவினர்கள் பிரமுகர் என பலர் வெளிநாடுகளில் இருந்தும் கலந்து சிறப்பித்தனர்.அங்கு உரையாற்றிய பிரதமவிருந்தினராக கலந்து கொண்ட யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் உரையாற்றும் போது இவ்வாறான முக்கியமான வேலைத் திட்டங்களுக்கு பெரும்பாலும் அரசாங்கத்தின் உதவியையே எதிர்பார்க்கும் கால கட்டத்தில் தான் பிறந்த ஊருக்கு கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவி இந்த உள்ளக விளையாட்டு நிலையத்தை அமைக்க நிதி வழங்கிய முத்தையா இராஜகோபால் அவர்கள் அவரது துணைவியார் திருமதி பராசக்தி ஆகியோர் போற்றுதற்கு உதவியவர்கள் என்றார்.ஏற்புரை வழங்கிய AMR முத்தையா இராஜகோபால் அவர்கள் இந்த திட்டத்திற்கு உதவி செய்ய வேண்டும் என்று கல்வியங்காடு ஞானபாஸ்கரோதய சங்கத்தினர் தன்னிடம் கோரிக்கை வைத்தபோது தான் அவர்களிடம் எவ்வளவு காலத்தில் உள்ள விளையாட்டு நிலையத்தின் கட்டடத்தை கட்டி முடிப்பீர்கள் என்று தான் கேட்டதாகவும் தனது விருப்பத்திற்கு ஏற்ப நிர்வாகிகள் குறுகிய காலத்தில் இந்த கட்டத்தை கட்டி முடித்தார்கள் என்றும் தெரிவித்தார்.வாணவேடிக்கை மற்றும் கலை நிகழ்ச்சிகள் இசை நிகழ்ச்சிகள் என மக்கள் விரும்பும் நிகழ்;சசி இந்த திறப்பு விழாவில் யாழ்ப்பாணம் கல்வியங்காடு ஞானபாஸ்கரோதய சங்கத்திஏற்பாடு செய்திருந்தனர் ஞானபாஸ்கரோதய சங்கத்தின் பொருளாளர் தனுசன் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert