April 24, 2024

மறுதலிக்கிறார் அங்கயன்?

 வலி. தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர் ஜோன் ஜிப்ரிக்கோ மீது, யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதனின் ஆதரவாளர்களால் தாக்குதல் நடாத்தப்பட்டதாக வந்த செய்தியை மறுதலித்துள்ளார் அங்கயன்.

மதுபோதையில் வந்த ஒருவர் தனது வீட்டை தாக்கியதாக தெரிவித்து பொலிஸ் முறைப்பாட்டை முதலில் பதிவு செய்திருந்தார் ஜோன் ஜிப்ரிக்கோ. 

பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், ஜோன் ஜிப்ரிக்கோவினால் குற்றம்சுமத்தப்பட்ட இளைஞரை, அவரும் அவருடைய குடும்பத்தினரும் மோசமாக தாக்கி கொடுமைப்படுத்தியமை தெரிய வந்துள்ளது. 

இதையடுத்து, ஜோன் ஜிப்ரிக்கோவை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்ற நிலையில் அவர் பொலிஸ் நிலையத்தில் வன்முறையில்  ஈடுபட்டு பொலீசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர். 

மேலும் ஜோன் ஜிப்ரிக்கோவுக்கும் அவரால் குற்றம்சாட்டப்பட்டுள்ள இளைஞருக்குமிடையில் 2019 ம் ஆண்டு ஆரம்பித்த பகையும் அப்போது ஜோன் ஜிப்ரிக்கோவால் மேற்கொள்ளப்பட்ட வன்முறையும் இப்போது தெரியவந்துள்ளது. 

குடும்ப விவகாரத்தாலும் சகோதர பாசத்தாலும் எழுந்த பகையை மீண்டும் உருவாக்கி அதில் அரசியல் லாபம் தேடுவதோடு, தன்மீதான அனுதாப அலையை அவர் உருவாக்க முனைவது தெட்டத்தெளிவாகிறது. 

மேலும் „ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும்  மாத்திரம்“ அங்கஜன் இராமநாதனின் பெயரை இத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபடுத்தி திட்டமிட்டு பரப்பி, சேறுபூசும் நடவடிக்கையை அவரும் அவருடைய ஆதரவுதரப்பும் மேற்கொண்டு வருகின்றனர். 

இதேவேளை குறித்த இளைஞருக்கு, அங்கஜன் இராமநாதனுடனோ, அவருடைய ஆதரவு அணியுடனோ எவ்வகையிலும் தொடர்புகள் இல்லை என்பதும் தெளிவாகியுள்ளது. 

எனவே இக்காணொளியை கவனமாக பார்த்து முடித்தபின்னர், ஜோன் ஜிப்ரிக்கோ என்ற நபரால் மேற்கொள்ளப்படும் அரசியல் நாடகத்தை அனைவராலும் புரிந்துகொள்ள முடியும் எனவும் அங்கயன் இராமநாதன் தெரிவிததுள்ளார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert