April 19, 2024

இலங்கையில் நடப்பது புதினமானது:திகா!

இலங்கையில்  என்ன நடக்கின்றது என்பது பெரும் புதிராகவே இருக்கின்றது. ஆட்சியாளர்களின் முறையற்ற முகாமைத்துவத்தால் எதிலும் நிலையற்ற தன்மையே காணப்படுகின்றது.

இரவில் நித்திரைக்குச் சென்று, காலையில் கண்விழித்தால் ஏதேனும் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. கட்டுப்பாட்டு விலையும் இல்லை. இதனால் வியாபாரிகள் தங்களுக்குத் தேவையான விலையில் விற்பனை செய்து வருகின்றனர். இதனால் மக்களுக்கே பெரும் பாதிப்பு.

அதுமட்டுமல்ல புதிய புதிய வரிசைகளும் உருவாகி வருகின்றன.  சமையல் எரிவாயுவுக்கு வரிசை, பால்மாவுக்கு வரிசை, சீனிக்கு வரிசை, தற்போது டீசல், பெற்றோலுக்கு வரிசை எனப் பல வரிசைகள் உருவாகியுள்ளன. இந்த ஆட்சி தொடர்ந்தால் மேலும் பல வரிசைகளும் உருவாகும் அபாயம் உள்ளது.

ஆட்சியாளர்களிடம் ஆளும் திறமை இல்லை. இனவாதம் பேசியே ஆட்சிக்கு வந்தனர். இவர்களுக்கு இறைவன்  தக்க தண்டனை வழங்கியுள்ளார்.

தங்களால் முடியாது எனத் தெரிந்தும், அதிகார ஆசையில் தொடர்ந்தும் ஆள இவைகள் முற்படுகின்றனர். முடியாவிட்டால் வீடு செல்லுமாறு இவர்களை நாம் வலியுறுத்துகின்றோம் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் வலியுறுத்தினார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert