März 29, 2024

போரை விரும்பவில்லை! ஆனால் ரஷ்யாவின் பாதுகாப்பு நலன்களை உக்ரைன் புறக்கணிக்க அனுமதிக்காது – ரஷ்யா

ரஷ்யா பெப்ரவரி மாதம் உக்ரைனை ஆக்கிரமிக்கக்கூடும் என்று அமெரிக்கா எச்சரித்ததை அடுத்து ரஷ்யா போரை விரும்பவில்லை என்று ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை ரஷ்ய வானொலிக்கு வழங்கிய செவ்வியில் ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கருத்துரைக்கும் போதே அவர் இக்கருத்தினை வெளியிட்டுள்ளார்.

நாங்கள் உக்ரைனுடன் மோதனை நாடவில்லை. ஆனால் ரஷ்யாவின் பாதுகாப்பு நலன்களை உக்கரைன் புறக்கணிக்க அனுமதிக்காது என்று மீண்டும் கூறினார்.

உக்ரைன் ரஷ்ய கூட்டமைப்பைச் சார்ந்து இருக்கும் வரைக்கும் ஒரு போர் இருக்காது. எங்களுக்கு போர் வேண்டாம் என்று செவ்வியில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவும் நேட்டோவும் ரஷ்யாவின் பரந்த பாதுகாப்புக் கோரிக்கைகளை நிராகரித்துப் பதிலளித்தன.

இதனையடுத்து முக்கிய கேள்விக்கு சாதகமான பதில் இல்லை என்றாலும் இரண்டாம் நிலை கேள்விகள் பற்றிய பேச்சுகளுக்கு இது ஒரு தொடக்க புள்ளியாக இருக்கும் என்பதால் பதில்கள் நம்பிக்கைக்கு சிறிய காரணத்தை அளித்ததாக ரஷ்யா கூறியது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert