April 20, 2024

போராட்டம் தொடரும் :மருத்துவர்கள் எச்சரிக்கை!

இலங்கை சுகாதார அமைச்சு தன்னிச்சையாக அறிவித்துள்ள வைத்திய இடமாற்றங்களை உடனடியாக இரத்து செய்யவேண்டும்.தவறுமிடத்து நாடாளவியரீதியிலான பணிப்புறக்கணிப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்படுமென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வடமாகாண கிளை அறிவித்துள்ளது.

இன்று திங்கட்கிழமை யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில் கடந்த காலங்களில் ஏற்பட்ட நெருக்கடியான சூழலில் மக்களிற்கான மருத்துவ சேவைகள் பாதிப்புறாத வகையில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் திட்டமிட்டு முன்மொழிந்து ஆலோசனைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டமையினால் பின் தங்கிய பிரதேசங்களில் கூட மருத்துவர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.இதனால் போதிய மருத்துவ வசதிகளை வழங்க முடிந்தது.

ஆனால் தற்போது தன்னிச்சையர்க இடமாற்ற ங்கள் மற்றும் நியமனங்களை வழங்கியுள்ளதன் மூலம் பின்தங்கிய பிரதேச மக்களிற்கான மருத்துவ அடிப்படை வசதிகள் கூட இன்னமும் கிட்டாத சூழலே ஏற்படப்போகின்றது.

அரச சுகாதார அமைச்சின் இத்தகைய போக்கினை கண்டித்தும் மருத்துவ அதிகாரிகள் சங்கத்துடனான கலந்துரையாடலின்றி முன்னெடுக்கப்பட்ட  இடமாற்றம் மற்றும் நியமனங்களை கண்டித்தும் இன்று சில மாவட்டங்களில் அத்தியாவசிய மருத்துவ சேவைகளிற்கு குந்தகமின்றி அடையாள போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நடவடிக்கைகள் சீர் செய்யப்படாது விட்டால் போராட்டம் அனைத்து மட்டங்களிலும் விஸ்தரிக்கப்படுமென்பதை எச்சரிக்க விரும்புகின்றோம்.

ஏங்களது மருத்துவ அதிகாரிகள் சங்கம் வடக்கிலும் வைத்தியசாலைகள் ரீதியாக விஸ்தரிக்கப்பட்டமையாலேயே தீவகப்பகுதி மக்கள் கூட வைத்திய வசதிகளை பெற்றமையினை மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.