April 19, 2024

ஒமைக்ரான் 70 மடங்கு அதிக வேகத்தில் பரவக்கூடியது: வெளியான தகவல்

ஒமைக்ரான் 70 மடங்கு அதிக வேகத்தில் பரவக்கூடியது: வெளியான தகவல்

இந்தநிலையில் டெல்டா வகை கொரோனா வைரசை விட ஒமைக்ரான் வைரஸ் 70 மடங்கு அதிக வேகத்தில் பரவக்கூடியது என்று ஹாங்காங் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் முதல்முறையாக கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் இந்தியா உட்பட உலகம் முழுவதும் பரவ தொடங்கி விட்டது.

இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் மொத்தம் இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை நெருங்கிவிட்டது.

இங்கிலாந்தில் 4,120 பேரும், தென் ஆப்பிரிக்காவில் 1,000 பேரும், அமெரிக்காவில் 321 பேரும், டென்மார்க்கில் 273 பேரும், சுவிட்சர்லாந்தில் 128 பேரும், பெல்ஜியத்தில் 124 பேரும், ஆஸ்திரேலியாவில் 103 பேரும், ஜெர்மனியில் 102 பேரும், இஸ்ரேலில் 90 பேரும், இந்தியாவில் 87 பேரும் மற்றும் 80 நாடுகளில் 604 பேரும் ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் டெல்டா வகை கொரோனா வைரசை விட ஒமைக்ரான் வைரஸ் 70 மடங்கு அதிக வேகத்தில் பரவக்கூடியது என்று ஹாங்காங் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆனால் டெல்டாவை விட மிகவும் குறைவான உடல் பாதிப்பையே ஒமைக்ரான் ஏற்படுத்துவதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

டெல்டாவுடன் ஒப்பிடுகையில் ஒமைக்ரான் வைரஸ் 70 மடங்கு வேகமாக பரவும் தன்மை கொண்டது. ஆனாலும் அதிவேகமாக நுரையீரலுக்குள் செல்லும் ஒமைக்ரான் வைரஸ் டெல்டாவை விட மிக குறைவான அளவில் நுரையீரல்களை தாக்கும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.