April 19, 2024

கொவிட் விதிமுறைகளை மீறினார் பிரித்தானியப் பிரதமர்!!

பிரித்தானியப் பிரதமர் போரிஸ் ஜோன்சன் கடந்த ஆண்டு கொவிட் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்த வேளை (வீடுகளுக்குள் சந்திப்பது தடைசெய்யப்பட்ட நிலையில்) டவுனிங் வீதியில் அமைந்துள்ள பிரதமரின் அலுவலத்தில் கடந்த டிசம்பர் மாதம் 15ஆம் நாள் இரு சக ஊழியர்களுடன் சந்திப்பில் இருந்தமை தொடர்பில் புகைப்படம் ஒன்றை சண்டே மிரர் வெளியிட்டுள்ளது. இதனால் சர்சை எழுந்துள்ளது.தொற்றுநோய்களின் போது ஊழியர்களின் பணிக்கு நன்றி தெரிவிக்க பிரதமர் சந்திப்பை நடத்தினார் என்று டவுனிங் வீதி விளக்கம் கூறியுள்ளது.

அந்த நேரத்தில் திரு ஜான்சன் கோவிட் விதிகளை மீறியதாக தான் நினைத்ததாகவும், இந்த நிகழ்வு கோபத்தை உருவாக்கியது என்றும், பிரதமர் மீதான நம்பிக்கையைக் குறைந்துவிட்டது  தொழிலாளர் கட்சியின் தலைவர் சர் கீர் ஸ்டார்மர் கூறினார்.

கோவிட் விதிகள் தடை செய்யப்பட்ட காலத்தில் டவுனிங் தெருவில் கூட்டங்கள் பற்றிய மூன்று குற்றச்சாட்டுகள் குறித்து அரசாங்கம் விசாரணையைத் தொடங்கிய பின்னர் இச்செய்தி வெளிவந்துள்ளது.

சந்திப்பில் லைப்ரரியில் டின்சல் ஸ்கார்ஃப் அணிந்த சக ஊழியருக்கும் சாண்டா தொப்பி அணிந்திருந்த மற்றொருவருக்கும் பிரதமர் அமர்ந்திருப்பதை புகைப்படம் தெளிவுபடுத்தியிருக்கிறது.