April 25, 2024

இதுவா ஆசியாவின் ஆச்சரியம்? அரசாங்கத்தை கடுமையாகச் சாடிய கொழும்பு பேராயர்

ஆசியாவின் ஆச்சரியம் இதுவா? என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை (Malcolm Ranjith) அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

கனேமுல்ல பெல்லக தேவாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் இன்று உரையாற்றிய போது அவர் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

நத்தார் தினமன்று மதுபானம் விற்பனை செய்வதற்கு சுற்றுலாத்துறை அமைச்சினால் அனுமதி பெற்றுக்கொண்ட ஹோட்டல்களுக்கு அனுமதி வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.

வெசாக் பௌர்ணமிக்கு மதுபான விற்பனை தடையென்றால் நத்தார் பண்டிகையிலும் தடை செய்ய வேண்டும் என்பதனை சுற்றுலாத்துறை அமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும்.

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை என்றே தெரிகின்றது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த அரச தலைவர் விசாரணைக் குழுவில் பெயர் விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால், இதுவரையில் எவரிடமும் விசாரணை செய்யப்படவில்லை. நாடகம் நடிக்கப்படுகின்றது.

எந்தவொரு அரசியல் தலைவரும் மதக் கொள்கைகளை விடவும் உயர்ந்தவர்கள் கிடையாது என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.