April 19, 2024

சிறீரவி, லோகன் இருவராலும் வாகீசன் காட்டிக் கொடுக்கப்பட்டர் (வாகீசன் அறிக்கை வெளியிடுவது தற்போதைய காலத்தின் அவசியம்)

இன்று யேர்மனியில் இவ்வளவு குழப்பங்களுக்கும் காரணம் கிளைக்கு சரியான ஆழுமையுள்ள பொறுப்பாளர் இல்லாததே. சிறீரவி, லோகன் இருவராலும் வாகீசன் காட்டிக் கொடுக்கப்பட்டு மறியலுக்குப் போகும்வரை அனைத்துச் செயற்பாடுகளும் 2009 க்கு முன்னரும், 2009 க்கு பின்னர் வாகீசன் மறியலுக்குப் போகும்வரையில் நன்றாகவே நடந்தது. வாகீசன் மறியலுக்குப் போகாமல் இருந்திருந்தால் சிறீரவி, லோகன், ஒபகவுசன் சங்கர் போன்ற பலர் பொறுப்புக்களில் இருந்திருக்க மாட்டார்கள். அதற்காக வாகீசன் நடவடிக்கை எடுத்ததாகவும் அறிகிறோம். வாகீசன் தொடர்ந்து பொறுப்பில் இருந்தாலும், அல்லது சிறையால் வந்து தொடர்ந்து இங்கு இருந்தாலும் தங்களது அடாவடித்தனங்களை நடாத்த முடியாது என்ற நோக்கில் திட்டமிட்டே அதற்கேற்றவாறு சிறீரவியால் வழக்கு நடத்தப்பட்டது. இன்று வெளியே நிற்கின்ற உள்ளே நிற்கின்ற பல செயற்பாட்டாளர்களுக்கு இவ்விடயம் நன்கு தெரியும். எமது தேசியத்தலைவரால் இங்கு அனுப்பப்பட்டவர் வாகீசன். பல திறமையான செயற்பாட்டின் நிமித்தம் தலைவரால் பாராட்டைப் பெற்றவர். இன்று உண்மைகள் பல வெளிவந்திருக்கின்ற சூழலில், பொறுப்பில் இருந்து கொண்டு சதிராடிக் கொண்டிருக்கின்ற பலரது உண்மை முகங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், நீதியும், நியாயமும், தர்மமும், செயற்திறனும், துணிவும் நிறைந்தவர்கள் ஒருங்கிணைந்து வருகின்ற இவ்வேளையில் வாகீசனது பங்களிப்பும் இருக்குமானால் நிலைமைகள் அனைத்தும் மாறும். இதற்கு நடந்த அத்தனை உண்மைச் சம்பவங்கள், காட்டிக் கொடுக்கப்பட்டதற்கான ஆதாரங்களென அனைத்தும் உள்ளடங்கிய தெளிவான அறிக்கை ஒன்றை வாகீசன் வெளியிடுவது தற்போதைய காலத்தின் அவசியமும் அவசரமும் மட்டுமல்லாது, நம்பிக்கை வைத்து தேசியத்தலைவரால் அனுப்பப்பட்ட வாகீசன் தலைவர்மேல் வைத்த மரியாதையும், உண்மையான விடுதலைச் செயற்பாட்டாளர் என்பதையும் வெளிப்படுத்தும். சுரேஸ்