März 28, 2024

தங்க வேட்டை! புலிகள் புதைத்தனராம்!

இறுதி யுத்த காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் புதைத்து வைக்கப்பட்ட தங்கத்தை தோண்டி எடுக்க முயற்சித்ததாக இரண்டு அமைச்சர்களின் செயலாளர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டது.முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ரி .சரவணராஜா முன்னிலையில் இந்த அகழ்வு நடவடிக்கைகள் பொலிஸாரால் இன்று மாலை (02)ஆரம்பிக்கப்பட்டுள்ளது

முல்லைத்தீவு நீதிவானின் உத்தரவிற்கு கடந்த நவம்பர் மாதம் 25 ஆம் திகதி புலிகள் அமையத் தோண்டி எடுக்கத் திட்டமிடப்பட்டது.எனினும், மாவீரர் தின நிகழ்வுகளினால் இந்த நடவடிக்கை இன்றையதினம் (02)  வரையில் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் ஏற்கனவே நீதிமன்றம் குறிப்பிட்ட தேதியான இன்றையதினம் மேற்படி அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த அகழ்வு பனி ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ள பகுதியில் ஏற்கனவே இரண்டு குழிகள் தோண்டப்பட்டுள்ள நிலையில் காணப்படுகின்றதோடு குறித்த குழிகள் 05  அடிக்கு மேல்  ஆழம் கொண்ட குழிகளாகவும் காணப்படுவதோடு நீர் நிரம்பிய நிலையில் காணப்படுகின்றன.

முதற்கட்டமாக குழிகளில் உள்ள  நீரைவெளியேற்றும்   நடவடிக்கை இன்றையதினம் தொடர்ந்து இயந்திரங்களை கொண்டு அகழும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.பொதுப்பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர மற்றும் மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் செயலாளர்கள் இருவர் இந்த தங்கத்தை முன்கூட்டியே தோண்டி எடுக்க முயற்சித்துள்ளனர்.

இதற்காக புதுக்குடியிருப்பு காவல் நிலைய பொறுப்பதிகாரியின் ஒத்துழைப்பு கோரப்பட்டுள்ளது.  பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் வீட்டுக்கே சென்று உதவி கோரப்பட்ட போதிலும் அதற்கு அவர் இணங்க மறுத்துள்ளார்.

நீதிமன்றத்தில் அனுமதி பெற்றுக் கொள்ளப்பட்டு 25 ஆம் திகதிக்கு முன்னதாக இரகசியமாக தங்கத்தை தோண்டி எடுக்க உதவுமாறு கோரியுள்ளனர்.

எனினும் இந்தக் கோரிக்கையை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நிராகரித்துள்ளார்.  என ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தமை குறபிடத்தக்கது.