April 20, 2024

சுவிட்சர்லாந்தில் நடன போட்டியில் பாராட்டுக்களை பெறும் ஈழத்து இளைஞர்கள்

சுவிற்சர்லாந்தின் தேசியதொலைக்காட்சியான SRF, STANT LAND TELENT என்றபோட்டி நிகழ்வினை நாடுதழுவிய ரீதியில் நடத்தியிருந்தது.

இந்தப் போட்டி நிகழ்விற்கு ஈழத் தமிழர்கள் சார்பாக சுவிஸ் நாட்டிலிருந்து Dream Creation Dance என்ற நடனக்குழு கடந்த 18.09.2021அன்று அரையிறுதிப் போட்டியில் தெரிவாகி 10.10.2021 அன்று நடைபெற்ற இறுதிச்சுற்றில் பங்குபற்றி நடுவர்களினதும் பார்வையாளர்களினதும் பாராட்டினைப்பெற்றிருந்தது.

இதனால் சுவிற்சர்லாந்து வாழ்தமிழர்கள், எமது பிள்ளைகளும் இந்த நாட்டின் மிகப்பிரபல்யமான தொலைக்காட்சியில் இந்த நாட்டவர்களுடன் போட்டியில் பங்கு பற்றி தமது திறமைகளை வெளிப்படுத்தியமை சிறப்பு என்ற மகிழ்ச்சியில் இருந்தார்கள்.

தற்போது சுவிற்சர்லாந்து தலைநகர் பேர்ணில் தமிழில்வழிபாடு நிகழ்த்தப்படும் திருக்கோவிலான சிவன்கோவிலும், பேர்ண் வள்ளுவன் பாடசாலையும் நடனக்குழுவினருக்கு சூரன்போர் அன்று சிறப்பான மதிப்பளிப்பினைச் செய்துள்ளார்கள்.

சைவநெறிக்கூடம் சார்பாக மாலை அணிவித்து, திருக்காளாஞ்சி வழங்க, பேர்ண் வள்ளுவன் பாடசாலை, வள்ளுவர் உருவம் பொறிக்கப்பட்ட நினைவுக் கிண்ணங்களையும்,மலர்களையும் கொடுத்து அடியாரகள் முன்னிலையில் மதிப்பளித்தார்கள்.

அதனைத்தொடர்நது தமிழ்மக்கள் மத்தியில் மிகப்பிரபல்யமான ஊடகமான லங்காசிறி இணையத்தளமும் தமிழ்மக்களால் அறியப்பட்டவரும் யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியக்கலாநிதி திரு.தங்கமுத்து. சத்தியமூர்த்தி அவர்களின் வேண்டுகோளுடன் கூடிய வாழ்த்து செய்தியினை உலகத்தமிழர்களிடையே கொண்டு சென்றமைக்கும், இவற்றைத்தொடர்ந்து சுவிற்சர்லாந்தின் பல தமிழ் அமைப்புகள் எமக்கு வாக்களிக்கும்படி வேண்டியமையானது எமக்கு சுறுசுறுப்பான மனநிலையை தோற்றுவித்தது என இவர்களுக்கெல்லாம் நன்றி தெரிவித்தார்கள்.

இந்த சூரன்போர் வேளையில் எம்மை அழைத்து மதிப்பளித்த உயர்செயலில் இணைந்து பணியாற்றிய பேர்ண் வள்ளுவன் பாடசாலைக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொண்டார்கள்.

பேரண் நகரமேற்குப் பகுதி சமூகசேவையாளர்களின் பொறுப்பாளர் Stephanie Schär  மற்றும் சூரிச் மாநிலத்திலிருந்து திரு.தர்சன் அவர்களுக்கும் நிகழ்வை சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.