April 19, 2024

ஜேர்மனியில் கொரோனா அலை – 24 மணிநேரத்தில் 50 ஆயிரத்தை கடந்த தொற்றாளர்கள்

ஜேர்மனியில் கொரோனா தொற்று பெரும் அலை தாக்கியுள்ளதால் முன்னொருபோதும் இல்லாத வகையில் கடந்த 24 மணி நேரத்தில் தினசரி தொற்று 50,000ஐ தாண்டியுள்ளது.

அதே போல தினசரி கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை 235 ஆக உயர்ந்துள்ளது.

ஜேர்மனியின் தேசிய தொற்றுநோயியல் ரொபர்ட் கோச் சுகாதாரகண்காணிப்பு நிறுவனம் இன்று காலை தனது அறிக்கையிடலை செய்தபோது பல ஜேர்மனியர்களால் இதனை நம்பவே முடியவில்லை.

ஏனெனில் கடந்த 24 மணி நேரத்தில் 50,196 தொற்றுக்கள் பதிவாகிய அவலத்தை வெளிப்படுத்திய ரொபர்ட் கோச், ஜேர்மனியில் கொரோனா தொற்று தொடங்கியதிலிருந்து தினசரி தொற்று 50,000ஐ தாண்டியது இதுவே முதல் முறையெனவும் குறிப்பிட்டுள்ளது.

அதே நேரத்தில் ஜேர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 235 ஆக உயர்ந்துள்ளது. இந்த புதிய நிலவரங்களால் மருத்துவமனைகளின் அழுத்தம் அதிகரித்து வருவதால் சக்சோனி, பவேரியா பேர்லின் போன்ற பிராந்தியங்கள் தடுப்பூசி போடப்படாதவர்களை இலக்காகக் கொண்டு புதியகட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

பெர்லினைப் பொறுத்தவரை தடுப்பூசி போடாதவர்கள் உணவகங்களின் உள்ளக அரங்குகள் பார்கள், விளையாட்டு அரங்குகள் மற்றும் சிகையலங்கார நிலையங்களுக்குள் செல்லமுடியாது.

கொரோனா தொற்று இல்லையென்ற சான்றிழ் வைத்திருந்தாலும் இந்த அனுமதிமறுப்பு செய்யப்படும் இந்த நிலையில் பெல்ஜியத்திலும் சராசரியாக ஒரு நாளைக்கு 8,000 புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகிவருகின்றன.

பெல்ஜிய மருத்துவமனைகளில் 2,000 கொவிட் நோயாளிகள் சிகிச்சையில் உள்ள நிலையில் 65 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸை சுகாதார அதிகாரிகள் இப்போது பரிந்துரைக்கின்றனர்.