April 19, 2024

இலங்கையை காப்பற்றவே சுமந்திரனின் அமெரிக்க பயணம்!

இனஅழிப்பை மேற்கொண்ட இலங்கையை ஐசிசியிடம் இருந்து காப்பாற்றவே அமெரிக்காவுக்கு  கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் பயணத்தை  முன்னெடுத்திருப்பதாக தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் குற்றஞ்சுமத்தியுள்ளது.

இலங்கைக்கு எதிராக லண்டனில் இனப்படுகொலையை அம்பலப்படுத்தி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போது வழக்கு ஐசிசி வழக்கறிஞரின் கையில் உள்ளது.

இன அழிப்பின் பங்காளிகளான இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளையும் காப்பாற்றவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஜனாதிபதி சட்டத்தரணி கே. கனகேஸ்வரன் மற்றும் சட்டத்தரணி கலாநிதி நிர்மலா சந்திரஹாசன் ஆகியோர் அமெரிக்காவிற்கு செல்கின்றனர் எனவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதன் ஒரு அங்கமாகவே 13வது திருத்தச்சட்டத்தை தூக்கிப்பிடித்தவாறு ஒரு கும்பல் திரிகின்றது.

முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் போன்றவர்கள் மக்களிற்கு எதனை சொல்லி தேர்தலில் வெற்றி பெற்றார்களோ அந்நிலைப்பாட்டிலேயே பயணிக்கவும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் கோரியுள்ளது.