April 18, 2024

வான்பாய்கின்ற முல்லைத்தீவில் குளங்கள் 

முல்லைத்தீவு மாவட்டத்தில் கனத்த மழை காரணமாக 3 குளங்கள் அதன் வான் மட்டத்தை அடைந்து வான்பாய்ந்து வருகின்றது.

தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக குளங்களின் நீர்மட்டங்கள் அதிகரித்துள்ளதனால் மருதங்குளம், பழையமுறுகண்டிகுளம், கோட்டை கட்டியகுளம் ஆகிய குளங்கள் வான்பாய்கின்றது.

முத்தையன் கட்டு நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ் உள்ள 8 குளங்களில் 14 அடி 02 அங்குலம் கொள்ளவு கொண்ட மருதங்குளம் 14 அடி 10 அங்குலமாக வான் பாய்கின்றது.

வவுனிக்குளம் நீர்பாசன திணைக்களத்தின் கீழ் உள்ள 12 குளங்களில் 09 அடி 06 அங்குலம் கொள்ளவுகொண்ட பழையமுறுகண்டிகுளம் 09 அடி 08 அங்குலமாக வான் பாய்கின்றது.

09 அடி 06 அங்குலம் கொள்ளவு கொண்ட கோட்டை கட்டியகுளம் 09 அடி 09 அங்குலமாக வான்பாய்கின்றது.

ஏனைய குளங்களின் நீர்மட்டங்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளதுடன் வான்பாயும் குளங்களின் கீழ் எதுவித பாதிப்புக்களும் இதுவரை பதிவாகவில்லை என மாவட்ட செயல தகவல்கள் தெரிவிக்கின்றன.