April 24, 2024

அணிதிரளுமாறு மக்களுக்கு அழைப்பு

அரசாங்கத்தின் பயணம் மக்கள் சார்புடையது அல்ல என்றும் இந்த நாட்டின் ஒட்டுமொத்த மக்களையும் ஒடுக்கும் பயணம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச(Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் உட்பட நாட்டின் அனைத்துப் பிரஜைகளும் இன்று பெரும் ஏமாற்றமடைந்துள்ளதாகத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இந்த துயரமான காலத்தை முடிவுக்குக் கொண்டுவர அனைவரும் அணிதிரளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

குறிப்பாக தற்போதைய அரசாங்கத்தை வழிநடத்திச் சென்ற 69 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு ஐக்கிய மக்கள் சக்தியுடன் கைகோர்த்து மக்கள் சார்பான அரசாங்கத்தை அமைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் விசேட அழைப்பை விடுத்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (03) குருநாகல் கல்கமுவ பிரதேசத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார். ஐக்கிய மக்கள் சக்தியின் கல்கமுவ தொகுதி அமைப்பாளர் பந்துல பண்டாரநாயக்கவின்(Bandula Bandaranaike) ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான அசோக் அபேசிங்க(Ashok Abeysinghe), ஜே.சி.அலவத்துவல(J.C. Alawathuwala) உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.

அரசாங்கத்தின் பொறுப்பற்ற மற்றும் அடக்குமுறை ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் பெருமளவிலான மக்கள் கலந்துகொண்டதுடன், விவசாய சமுகத்திற்கு இழைக்கப்பட்ட பாரிய அநீதி குறித்தும் அரசாங்கத்திற்கு எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.