April 18, 2024

கோத்தாவிடமிருந்த ஒரேயொரு முஸ்லீம் அமைச்சரும் வீட்டிற்கு!

கோத்தா அமைச்சரவையிலிருந்த ஒரேயொரு முஸ்லீம் அமைச்சரும் விலகும் முடிவுக்கு வந்துள்ளார்.

நீதியமைச்சர் அலி சப்ரி ஞானசார தேரரின் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த நியமனம் அனைத்து சமூகத்தினரின் நியாயமான நடத்தைக்கும் இடையூறாக அமைவதே அமைச்சரின் கருத்தாகும்.

முஸ்லிம் சமூகத்தின் முஸ்லிம் தலைவர்களான மௌலவிகள் அமைச்சருக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டதையடுத்து அவர் அமைச்சருக்கான எதிர்ப்பை அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளார்.

இந்த செயலணி தொடர்ந்தும் செயற்பட்டால் இனி நீதி அமைச்சராக பதவி வகிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை கடந்த வியாழன் அன்று நடைபெற்ற

கட்சித் தலைமைக் கூட்டத்தில் கட்சித் தலைவர்கள் பலர் இந்த நியமனத்திற்கு தமது அதிருப்தியை வெளியிட்டிருந்தனர்.