März 29, 2024

மேனியில் தமிழினப்படுகொலை ஆவணப் கையேடு நான்கு மொழிகளில் வெளியீடு

மேனியில் தமிழினப்படுகொலை ஆவணப் கையேடு வெளியீடு சிங்கள அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் தமிழினப்படுகொலை சம்பவங்களை ஆதாரங்களுடன் நான்கு மொழிகளில் நவீன வடிவமைப்பில் தொகுக்கப்பட்டு வெளியிடப்படுகிறது நேற்றைய தினம் ஜேர்மனியின் வரண்டோவ் என்ற நகரில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வொண்று மக்கள் எழுச்சியுடனும் தமிழின உணர்வாளர்கள் , அரசியலத் தலைவர்கள்,ஜேர்மன் கட்சிசார், மற்றும் , மனிதவுரிமைசார்
பிரமுகர்களுடனும் மிகவும் சிறப்பாகவும் உணர்வுடனும் தமிழர் மரபுகளுடன் தமிழீழத் தேசியக்கொட்டியேற்றப்பட்டு தமிழீழ எழுச்சி கானங்களை இளையோர் வழங்க சிறப்பானமுறையில் … நிகழ்வானது ஆரம்பமாகி தொடர்ந்து எமது தேசியத் தலைவரின் உயரிய வார்தையான இளையோரின் கையில் விடுதலைப் போராட்டத்தை ஒப்படைக்கிறேன் எனபதறக்கு செயல்வடிவம் கொடுத்து ஜேர்மனியில் பிறந்தஇளைய தலைமுறையைச் சேர்ந்த சட்டத்துறைபயிலும் செல்வி ப.தாட்சாயினி அவர்களினால் ஒண்டரை வருடமாகச் சேகரிக்கப் பட்ட தகவல்கள் அடங்கிய ஆவணப் பெட்டகம் வெளியிட்டு வைக்கப்பட்டது. இவ்வாறான தமிழினப்படுகொலையின். ஆவணங்களைப் பயன்படுத்தி அனைத்துலக ரீதியில் எமது நியாயமான உரிமைகளைச் சர்வதேசத்திடம் கோரிப்போராடுவோம். மேலதிக விடயங்கள் இணைக்கப்பட்டுள்ளன.