März 29, 2024

500 கி.மீ ஓடும் மின்சார மகிழுந்து!! அறிமுகம் செய்தது ரோல்ஸ் ரொய்ஸ்

உலகின் மிக விலை உயர்ந்து மகிழுந்துகளில் ஒன்றான ரோல்ஸ் ரொய்ஸ் நிறுவனம் தன்னுடைய முதலாவது மின்சார மகிழுந்தை அறிமுகம் செய்திருக்கிறது.அனைத்து வசதிகளையும் கொண்ட சொகுசான மகிழுந்தாக இது இருக்கும் என அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கூறி உள்ளார். 100 கி.வாட் மின்கலத்தைக் கொண்ட இந்த மின்சார மகிழுந்து, ஒருமுறை சார்ஜ் செய்தால் 500  கி.மீ தூரம் பயணம் செய்யலாம் என அந்நிறுவனம் கூறி உள்ளது.

மின்சார மகிழுந்தின் விலை விவரத்தை ரோல்ஸ் ரொய்ஸ் நிறுவனம் வெளியிடவில்லை. ஏற்கெனவே ரோல்ஸ் ராய்ஸ், அடுத்த 20 ஆண்டுகளில் தனது அனைத்து மாடல் கார்களையும் மின்சாரக் கார்களாக மாற்ற உள்ளதாக அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.