April 25, 2024

மட்டக்குளி ராணுவ முகாம் கட்டளை அதிகாரி கைது !

தொட்டலங்க எல்லே விளையாட்டு குழு தலைவரை கொலைச் செய்த சம்பவம் தொடர்பில் மட்டக்குளி இராணுவ முகாமின் கட்டளையிடும் அதிகாரி லெப்ரினன் கேர்ணல் கொழும்பு வடக்கு குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டுள்ளாா்.

நேற்று மாலை கைது செய்யப்பட்ட இவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்படுவதாகவும் இராணுவத்துடன் இணைந்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.