März 29, 2024

கூடிக்கூடி கலையும் கூட்டங்கள்?

இலங்கையில் வாழ்கைச் செலவு அதிகரிக்காத வகையில் நியாயமான விலையில் மக்களுக்கு பொருட்கள் கிடைப்பதை உறுதிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு அமைக்கப்பட்ட விசேட குழுவின் கலந்துரையாடல் மெய்நிகர் வழியினூடாக இன்றும் நடைபெற்றுள்ளதாம்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் கலந்து கொண்டிருந்ததுடன், வாழ்கை செலவுடன் தொடர்புபட்ட துறைகளைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்களது விலைகளை கட்டுப்படுத்த முடியாத நிலையில் இத்தகைய கூட்டங்கள் நடந்துவருகின்றன.

இதனிடையே கொரோனா உலகளாவிய நோயும் அதன் பரவலை தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட  முடக்க நிலையும் பலரது வருமானத்தை பாதித்து வறுமையில் தள்ளியுள்ளது. போதாக்குறைக்கு நாட்டின் தவறான பொருளாதாரக் கொள்கைகள் அதனால் ஏற்பட்ட உணவு தட்டுப்பாடு மற்றும்  விலை அதிகரிப்பு பலரையும் கஸ்ட நிலைக்கு தள்ளியுள்ளது.

கொரோனா தாக்கம் நீடித்துள்ள இந்த நேரத்தில் கஸ்ட நிலையில் உள்ளவர்கள் மீண்டும் வாழ்க்கையில் எழுந்து அவர்களுடைய காலில்  நிற்பதற்கு உரிய  வகையில் அவர்கள் புதிய தொழில் முயற்சிகளை தொடங்குவதற்கு உதவவேண்டும்.

சுய முயற்சி இன்றி நாள் தோறும் மற்றவர்களின் உதவிகளை எதிர்பார்க்கும் கொடுப்பனவுகளை தவிர்ப்போமென சமூக மருத்துவர் முரளி வல்லிபுரநாதன் அழைப்புவிடுத்துள்ளார்.