März 28, 2024

பல்கலைக்கழகங்கள் ஆரம்பம்!

இலங்கையில் பல்கலைகழகங்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சகல பல்கலைக்கழக கல்வி மற்றும் கல்வி சாரா ஊழியர்களில் 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு இரண்டு தடுப்பூசிகளும் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

30 வயதுக்கு குறைவான கல்வி மற்றும் கல்வி சாரா ஊழியர்களுக்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் அந்தந்த மாவட்ட சுகாதார சேவைகள் மத்திய நிலையத்தினை தொடர்பு கொண்டு விரைவில் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளுமாறு சகல பல்கலைக்கழகங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.