உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மூடிமறைக்க இத்தாலி பயணம்!! மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களின் மூடிமறைப்பதற்கு மிகவும் சூட்சுமமான முறையில் சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன எனத் தெரிவித்த பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, வத்திக்கான பயணமும், சர்வதேசத்துக்குச் சென்று மறைக்கும் முயற்சியாகும் என்றார்.பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட குழுவில் வத்திகானுக்குச்சென்று பாப்பாண்டவரையும் சந்திக்கவுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இது சர்வதேசத்திடம் சென்று அதற்கு உள்ளே மறைந்துக்கொள்ள முன்னெடுக்கும் கீழ்மட்டமா செயற்பாடாகும் எனத் தெரிவித்துள்ள அவர், இந்த கீழ்மட்டமான வேலையை முன்னெடுக்க வேண்டாம் என பிரதமரிடமும் வெளிவிவகார அமைச்சரிடமும் கேட்டுக்கொண்டார்.

மக்களின் வரிப் பணத்தை செலவழித்து அவர்கள் அவ்வாறானதொரு பயணத்தை எதற்காக மேற்கொள்ளுகிறார்கள் என்றும் இதன்போது வினவினார். இது உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களின் உண்மையை வெளிப்படுத்தாது சர்வசேத்துக்குச் சென்று மறைத்துக்கொள்ளும் முயற்சியாகும் என்றார்.

கொழும்பில் நேற்று (8) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து தெரிவித்த அவர், அவர்களின் வத்திக்கான பயணத்தை நாம் பயனற்ற பயணமாகவே கருதுகிறோம். அதே​போல் அந்த வேலைத்திட்டத்தை தான் முழுமையாக நிராகரிப்பதுடன், அந்தப் பயணமானது சத்தியத்தை மூடிமறைக்கும் செயற்பாடாகவே கருதுகிறேன் என்றார்

வெளிநாடுகளையும் பாப்பாண்டாவரையும் தவறாக வழிநடத்துவதற்கான முயற்சியாகவே இதனைப் பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். பொய் கூறி நாம் எதிர்பார்க்கும் நியாயத்தை எமக்கு வழங்காமல் அரசாங்கத்துக்கு இலாபம் கிடைக்கும் வகைளில் அனைத்தையும் செய்து நியாயத்தை மூடி மறைக்க இந்த அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்பாடுகளில் மற்றொரு துரும்பே தற்போது முன்னெடுக்கப்படுகின்றது.

எனவே இவர்களின் செயற்பாடானது, சர்வதேசத்திடம் எம்மை தள்ளும் செயற்பாடாகும். இவர்கள் செல்ல தீர்மானிப்பதால், எமது நிலை என்ன என்பது குறித்து சர்வதேசத்துக்கு அறிவிக்கவுள்ளோம். நாம் இப்போதே இது தொடர்பில் சர்வதேசத்திடம் அறிவித்துள்ளோம் . இந்த அரசாங்கம் விசாரணைகளை மூடிமறைக்க எடுக்கும் முயற்சி குறித்து சர்வதேத்துக்கு அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றார்.

இந்த செயற்பாட்டை வன்மையாகக் கண்டிக்கிறோம். பக்கசார்பற்ற விசாரணையை முன்னெடுக்குமாறு, ஆனால் இந்த பிரச்சினையிலிருந்து விடுபடும் பதிலே எமக்கு கிடைத்தது. எனவே இந்த பிரச்சினையிலிருந்து விடுபட்டு சர்வதேசத்தையும் ஏமாற்ற எம்மால் இடமளிக்க முடியாது.

எனவே,அரசாங்கம் சர்வதேசத்திடம் செல்லுமாயின், நாமும் சர்வதேசத்திடம் செல்லுகிறோம். எமக்கு வேறு வழியில்லை சர்வதேசத்திடம் செல்லுவதைத் தவிர வேறு வழியில்லை. 73 ஆண்டுகளாக இந்த நாட்டில் படிப்படியாக வளர்ச்சியடைந்த மோசமான அரசியல் முறை,

தற்போது ஒரு தனிப்பட்ட நபரின் கைகளுக்கு சகல அதிகாரங்களையும் வழங்கியதன் மூலம் அந்த மோசமானமுறை பலப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த முறையை பலப்படுத்துவதன் மூலம் இந்த பிரச்சினைக்கு சாதாரண தீர்வு கிடைக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.