März 28, 2024

கடத்தப்பட்ட 6,000 கிலோ மாட்டிறைச்சியுடன் இருவர் கைது!!

மீன் கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் அதி குளிரூட்டப்பட்ட பாரவூர்தியில் 6,000 கிலோ மாட்டிறைச்சியை கொழும்புக்கு கடத்தி வந்த இருவர் தெஹிவளையில் வைத்து காவல்துறையின் சிறப்பு அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.தனிமைப்படுத்தல் ஊரடங்கு விதிமுறைகளை மீறி, ஹொரவபொத்தானையிலிருந்து கடத்திவரப்பட்ட மாட்டிறைச்சியுடனேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட இறைச்சியின் பெறுமதி 55 இலட்சம் முதல் 60 இலட்சம் ரூபா வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய தெஹிவளை பகுதியில் வைத்து குறித்த பாரவூர்த்தியைத் துரத்திச் சென்று, தெஹிவளை பொதுச் சந்தைக்கு அருகில் வைத்துக்  கைது செய்துள்ளனர்.

பாரவூர்திக்குள் சுமார் 6,000 ஆயிரம் கிலோ மாட்டிறைச்சியும், எருமை மாட்டிறைச்சியும் இருந்ததாகவும், மாடுகளின் தலைகளும் இருந்ததாகவும் காவல்துறையினர் கூறினர்.

சந்தேக நபர்களிடம் எந்த அனுமதிப் பத்திரமும் இருக்கவில்லை.

கைப்பற்றப்பட்ட மாட்டிறைச்சி, பாரவூர்தி என்ப மேலதிக நடவடிக்கைகளுக்காக தெஹிவளை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் கல்கிசை நீதிமன்றில் முன்னலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த மேலும் தகவல் வெளியாகியுள்ளது.