பிரித்தானியாவில் சிறப்பாக நடைபெற்ற தமிழீழ வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டி!!

பிரித்தானியாவில் கடந்த 6 ஆண்டுகளாக வல்வை 1976 ஆண்டு அணியினரால் நடத்திவரும்  பைலட் ஞானம், சிவகுரு தாத்தா மற்றும் தங்கப்பா (தங்கவேல்) ஆகியோரது

ஞாபகார்ந்த தமிழ் ஈழம் சுழல் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டி இவ்வாண்டும் சிறப்பாக நடைபெற்று முடிவடைந்துள்ளது.குறித்த சுழல் கிண்ணத்தைப் சொந்தமாகப் பெறுவதற்கு கடந்த ஆறு ஆண்டுகளாக பல அணிகள் விடா முயற்சியுடன் களத்தில் மோதி வருகின்றன.

நேற்று ஞாயிற்றுக்கிழமை மிச்சம் பொண்ட விளையாட்டுத் திடலில் தமிழீழத் தேசியக் கொடி மற்றும் பிரித்தானிய தேசியக் கொடி, புளூஸ் கொடி ஏற்றலுடன் தமிழர் தாயகத்தில் இலங்கை இந்திய இராணுவம் மற்றும் இரண்டகர்களால் கொல்லப்பட்ட மாவீரர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் அகவணக்கம் செலுத்திக் கொண்டு, மலர் மாலைகள் அணிவித்து விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.

குறித்த இப்போட்டியில் 9 அணிகள் வெற்றிக்கோப்பையை எடுத்துச் செல்வதற்காக களத்தில் கீழ் வரும் அணிகள் மோதின.

1. புளூஸ் லெஜன்ட் (Blue Legend 45 வயது தொடக்கம் 60 வயதுக்கு மேற்பட்டோர்)

2. 1971

3. 1972

4. 1973

5. 1974

6. 1976

7. 1978

8. 1979

9. 1981

வல்வை புளூஸ் லெஜன்ட் அணியும்  1979 அணியும் இவ்வாண்டுக்கான வெற்றிக்கோப்பை தட்டிச் செல்வதற்காக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. போட்டியின் முடிவில் 1979 அணி 3:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று இக்கோப்பையை முதல் முதலில் எடுத்துச் சென்றதுள்ளது. இரண்டாவது இடத்தை புளூஸ் லெஜண்ட் அணி பெற்றிருந்து.

ஒவ்வொரு ஆண்டும் எந்தவொரு இலாபகரமற்ற முறையில் நடைபெறும் போட்டியில் போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் உட்பட அனைவருக்கும் உணவுகள், சிற்றுண்டிகள், தண்ணீர் வகைகள் என அனைத்தும் இலவசமாக உபசரித்து வருகின்றனர் போட்டியை நடத்தும் நிர்வாகத்தினர்.

தமிழ் ஈழ சுழல் கிண்ணம் மட்டும் 3,000 பவுண்கள் பெறுமதியானது என்பது சிறப்பாக இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.