யாழ். மேயர் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!

Violation of court order !! Filed a case against Manivannan

யாழ். மாவட்டத்தில் கொரோனாத் தொற்றுக்குள்ளாகி இறப்பவர்களுடைய சடலங்களை அடக்கம் செய்வதற்கு யாழ். மாநகர சபையினால் 6,500 ரூபாய் கட்டணம் அறவிடப்படுகின்றது.

எனினும் குறித்த கட்டணத்தை செலுத்த முடியாதவர்கள் யாராவது தனிப்பட்ட முறையில் என்னை தொடர்பு கொண்டால் அவர்களுக்கு என்னால் உதவ முடியும் என யாழ். மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

யாழ். மாநகர ஆளுகைக்குள் உள்ள மின்மயான தகனம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மரணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

யாழ். மாவட்டத்தைப் பொறுத்தவரையில் கொவிட்டினால் மரணிப்பவர்களது சடலங்கள் யாழ்ப்பாணம் கோம்பையன் மணல் இந்து மயானத்தில் அமைந்துள்ள மின் தகன மயானத்தில் தகனம் செய்யப்பட்டு வருகின்றது. இந்த மயானமானது யாழ். மாநகர சபையின் எல்லைக்கு உட்பட்டது.

குறித்த மயானத்தில் நாளொன்றுக்கு 5 உடல்கள் தகனம் செய்யப்பட்டு வருகின்றன. எனினும் எதிர்வரும் எட்டாம் திகதி வரை சடலங்களை எரிப்பதற்கான முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் வைத்தியசாலையில் அதிக அளவிலான சடலங்கள் தேங்கியுள்ளன.

நாளொன்றுக்கு அதிகளவிலான சடலங்களை எரிவதற்கான தகைமை எம்மிடம் இல்லை.

எனவே எரியூட்டும் தகைமையை அதிகரித்து எமக்கு இன்னுமொரு எரியூட்டி வழங்குமாறு நாம் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். குறித்த கோரிக்கையை நிறைவேற்றப்பட்டால் நாளொன்றுக்கு அதிக அளவிலான சடலங்களை எரிக்க முடியும்.

எங்களுக்கு எரியூட்டி வழங்கப்படாவிட்டால் கூட பரவாயில்லை. வேறு ஒரு மயானத்துக்காவது அதனை வழங்குங்கள்.

ஏனெனில் யாழ். மாவட்டத்தில் தொற்றினால் மரணித்தவர்களை தகனம் செய்ய தற்பொழுது ஒரு எரியூட்டி தான் உள்ளது. இப்போதுள்ள நிலைமையில் இது போதாது என அவர் மேலும் தெரிவித்தார்.