März 28, 2024

யாழில் கஜேந்திரகுமாருடன் இராணுவம் முறுகல்!

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினருக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும் இடையே கடுமையான வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.

பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கொட்டடி கிராமத்தில் கொவிட் காரணமாக, முடக்கத்திற்குள்ளான மக்களுக்கான நிவாரணப் பணியினை நேற்றைதினம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மேற்கொண்டிருந்தனர்.

இந்த நிவாரணப் பணியானது கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது இராணுவத்தினருக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும் கடுமையான இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

 

இராணுவம் மற்றும் பொலிஸார் கடமையில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புக் கடவையில் வைத்தே முடக்கத்தில் உள்ள மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்குவது வழமை. இக் கடவையில் வைத்தே உலருணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு சுகாதார விதிமுறைக்கமையவே இடம்பெற்றது.

இதன் போது நிவாரணப் பணியை நிறுத்துமாறு இராணுவத்தினர் கூறிய போதும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் நிவாரணப்பணியை தொடர்ந்து மேற்கொண்டனர்.

இராணுவத்தினருக்கு நாடாளுமன்ற உறுப்பினரை யார் என்று தெரியாது – மரியாதை அற்ற விதமாக பேசியுள்ளனர்.

இறுதியில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் இராணுவத்தினர் மன்னிப்புக் கோரியதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.