April 24, 2024

மக்களிற்காக குரல் கொடுப்பனவர்கள் எதிரிகள் அல்லர்!

“ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் அமைப்புகள் மக்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கும் சந்தரப்பத்தில் அதனை அரசாங்கத்துக்கு எதிரான குழுக்களாக நினைக்க கூடாது”.“இந்த இரண்டு துறையினரும் ஜனாநாயக நாட்டில் முக்கியமானவர்கள்” என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தவிசாளரும் எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவருமான மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

ஊடகவியலாளர்களின் கைகளிலேயே நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகள் தங்கியுள்ளதாகவும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

மக்களின் வாக்குரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் முக்கிய பொறுப்பு ஊடகவியலாளர்களிடம் உள்ளதாக அவர் கூறினார்.

இதேவேளை, “ஊடகவியலாளர்கள் என்பவர்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உண்மையாளராக இருக்க வேண்டும் என்று கூறிய அவர், உண்மைகளை வெளிப்படுத்தவும், அதனை கூற முடிந்த நபராக ஊடகவியலாளர்கள் இருக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

இதேவேளை கோத்தாவின் கொலை அச்சுறுத்தலால் நாட்டைவிட்டு ஓடிய அவரது சகோதரன் சுனந்த தேசப்பிரிய சுவிஸில் அடைக்கலம் புகுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.