März 28, 2024

ஊழ்வினைப்பயன் வந்து உறுத்தவே!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் மனைவி மற்றும் 3 பேரின் தொலைப்பேசி உரையாடல் பதிவுகளையும் மற்றும் வங்கிக் கணக்கு விபரங்களையும் பொரளை பொலிஸில் ஒப்படைக்குமாறு சேவை வழங்குனர்கள் மற்றும் வங்கிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதேபோல், ரிஷாட் பதியுதினின் வீட்டில் உயிரிழந்த 16 வயது சிறுமியை அழைத்து வந்த இடைத்தரகரின் தொலைப்பேசி உரையாடல் பதிவுகள் மற்றும் வங்கிக் கணக்கு தகவல்களையும் பொரளை பொலிஸிற்கு பெற்றுக் கொடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

டயகம பகுதியைச் சேர்ந்த உயிரிழந்த சிறுமி கடந்த 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ரிஷாட் பதியுதீன் வீட்டிற்கு வருகை தந்துள்ளார்.

இவ்வாறு அழைத்து வரப்பட்ட சந்தர்ப்பத்தில் குறித்த சிறுமியின் வயது 15 வருடங்களும் 11 மாதங்களும் ஆகும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பொரளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்து வந்த குறித்த சிறுமி கடந்த ஜூலை மாதம் மூன்றாம் திகதி தீக்காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

சிகிச்சை பெற்று வந்த குறித்த சிறுமி கடந்த 16 ஆம் திகதி உயிரிழந்திருந்தார்