September 11, 2024

முதலமைச்சராகின்றார் துமிந்த?

 

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும்போது துமிந்த சில்வா மேல் மாகாண முதலமைச்சராக களமிறங்குவதற்குத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி பொதுமன்னிப்பின்கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, குறுகியதொரு ஓய்வு காலத்தின் பின்னர் மீண்டும் செயற்பாட்டு அரசியல் களமிறங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன், இதற்குத் தேவையான பிரசாரப் பணிகளையும், துமிந்த சில்வாவை மீண்டும் மக்கள் மத்தியில் பிரசித்தி பெறச் செய்யும் பணிகளையும் அவரது சகோதருக்குச் சொந்தமான ஊடக வலையமைப்பின் ஊடாக முன்னெடுப்பதற்கான தயார் படுத்தல்களும நடந்து வருகிறது.

மாகாண முதலமைச்சர் என்பது அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவிக்கு சமனானது என்பதால் முதலமைச்சர் பதவிக்கு குறிவைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

பாரத லக்‌ஷ்மன் பிரேமசந்திர கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் துமிந்த சில்வாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. எனினும், அவர் சிறைக்குச்சென்று சுமார் நான்கரை வருடங்களுக்குள் ஜனாதிபதி பொதுமன்னிப்பின்கீழ் கடந்த 24 ஆம் திகதி விடுதலையானார்.