April 19, 2024

தென்னைகளை அழித்துவிட்டு வீட்டுக்கு வீடு தென்னைமரமாம்!

வடகிழக்கில் பல்லாயிரக்கணக்கான தென்னைகளை அழிக்க காரணமாக இருந்த இலங்கை ஜனாதிபதி 40 இலட்சம் தென்னங் கன்றுகளை நடும் நிகழ்ச்சித்திட்டத்தை தொடங்கியுள்ளாராம்.

40 இலட்சம் தென்னங் கன்றுகளை நடும் “தொரின் தொரட்ட கப்ருக” (வீட்டுக்கு வீடு தென்னை மரம்) தேசிய நிகழ்ச்சித்திட்டம், இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பங்குபற்றலுடன், சிலாபம் பெருந்தோட்ட நிறுவனத்துக்குச் சொந்தமான தங்கொட்டுவ – புஜ்ஜம்பொல, வெலிகெட்டிய தோட்டத்தில், இன்று (10) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாம்.

தற்போது வருடாந்தம் சுமார் 2,800 மில்லியன்களாக உள்ள தேங்காய் அறுவடையை, இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் 3,600 மில்லியன் தேங்காய்கள் அறுவடை வரை அதிகரிக்க எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த இலக்கை அடைந்துகொள்ளும் நோக்குடன், நாடளாவிய ரீதியில் 40 இலட்சம் தென்னங் கன்றுகளை நடும் “தொரின் தொரட்ட கப்ருக” தேசிய நிகழ்ச்சித்திட்டத்தை, பெருந்தோட்டத்துறை அமைச்சு, தென்னை, கித்துள், பனை, இறப்பர் செய்கைகளை ஊக்குவித்தல் மற்றும் அவை சார்ந்த கைத்தொழில் பண்டங்களின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சு மற்றும் தென்னைப் பயிர்ச் செய்கை சபை ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ளனவாம்.

இராணுவ தேவைகளிற்காக குறிப்பாக காவலரண் அமைக்கவெனவும் பாதுகாப்பிற்கெனவும் ஆயிரக்கணக்கில் கோத்தபாய அழித்த தென்னைகளை படத்தில் காணலாம்.