April 19, 2024

“THE PEARL OF THE SILK ROUTE” நூல் கௌரவ பிரதமரிடம் வழங்கி வைப்பு!

இலங்கையின் சீன கலாசார மையத்தின் கடந்த ஆறு ஆண்டு கால முன்னேற்றத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட “THE PEARL OF THE SILK ROUTE” நூல் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் இன்று (06) அலரி மாளிகையில் வைத்து வழங்கப்பட்டது.
இலங்கையின் சீன கலாசார மையத்தின் பணிப்பாளர் லிவென் யூ (Liwen Yue) அவர்களினால் நூலின் முதல் பிரதி கௌரவ பிரதமருக்கு வழங்கப்பட்டது.
பணிப்பாளர் லிவென் யூ (Liwen Yue) அவர்கள் மற்றும் சாமர ரன்மண்டல அவர்களினால் எழுதப்பட்ட “THE PEARL OF THE SILK ROUTE” நூல் கடந்த ஆறு ஆண்டு காலத்தில் சீன கலாசார மையத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்ட தனித்துவமான திட்டங்களின் பிரதிபலிப்பாகும்.
2014 செப்டம்பர் மாதம் 16ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மற்றும் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சீன ஜனாதிபதி சீ ஜின் பிங் அவர்கள் ஆகியோரின் தலைமையில் தெற்காசியாவின் முதலாவது சீன கலாசார மையம் இலங்கையில் நிறுவப்பட்டது.
அப்போது முதல் அதன் பணிப்பாளராக தொடர்ந்து சேவையாற்றி வந்த லிவென் யூ (Liwen Yue) அவர்கள் தனது சேவை காலத்தை நிறைவுசெய்து நாடு திரும்பவுள்ளதாக இதன்போது கௌரவ பிரதமரிடம் குறிப்பிட்டார்.
3