April 20, 2024

கொரோனா காலத்தில் தமிழர் பகுதியில் அவலம்

கிளிநொச்சி தருமபுரம் பரந்தன் முல்லை A35 வீதியில் முதியவர் ஒருவர் அயர்ந்து தூங்கும் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் குறித்த முதியவர் மது போதையில் அவ்வாறு வீதியில் தூங்கியதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் நாடில் பயணக்கட்டுபாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் மது விற்பனை நிலையங்களும் பூட்ட்டப்பட்டுள்ளன. எனினும் கள்ளச்சாராயம் என்ற பெயரில் சட்ட விரோத கும்பலினால் விற்பனை செய்யப்படும் சட்டவிரோத கசிப்பு உற்பத்திகள் இவர் போன்றவர்கள் இவ்வாறு வீதியில் விழுந்து கிடப்பதற்கு காரணம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை தனது வாழ்வாதாரத்திற்காக சட்டவிரோத கசிப்பு உற்பத்தி மேற்கொள்ளும் நபர்கள் அயல் ஏழைக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை முடக்கி வருகிறார்கள் என சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

மிகவும் கஷ்டத்தின் மத்தியில் வாழும் குடும்பங்கள் இருந்தாலும் அவர்களின் கஷ்டத்தைப் போக்க ஒரு சிலர் உதவி கரம் நீட்டினாலும் சிலர் மதுவுக்கு அடிமையாகி கஷ்டத்தில் இருந்து மீளமுடியாமல் தவித்து வருவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சட்டவிரோத மதுவை ஒழித்தால் ஒழிய அவர்களின் கஸ்டங்களுக்கு தீர்வி கிடைக்காது எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.