März 29, 2024

அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி! இலங்கையில் மூவர் பலி!

இலங்கையில் ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர் குருதி உறைதல் நிலைமை ஏற்பட்டதாகக் கருதப்படும் மூவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றில் இன்று (21) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் வினாவுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி செலுத்தப்பட்டதையடுத்து, இலங்கையில்  6 பேருக்கு குருதி உறைதல் ஏற்பட்டிருந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது. அவர்களில் 3 பேர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி செலுத்தப்பட்ட சிலருக்கு ஒருசில வாரங்களுக்குள் குருதி உறைதல் ஏற்பட்டிருந்தது. அவ்வாறே, இலங்கையிலும் 6 பேருக்கு குருதி உறைதல் ஏற்பட்டிருந்த நிலையில், அவர்களில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

ஒரு மில்லின் பேருக்கு தடுப்பூசி போட்டதில் நான்கு தொடக்கும் ஆறு பேருக்கு மட்டுமே இவ்வாறு குருதி உறைவு ஏற்பட்டுள்ளது என உலக சுகாதார அமைப்பின் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது தடுப்பூசியின் பின் குருதி உறைவால் ஏற்படக்கூடிய உயிரிழப்புகள் எனப்பது மிகச் சொற்பமானது என உலக சுகாதார அமைப்பின் ஆராய்ச்சித் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

ஸ்ட்ராசெனெகா தடுப்பூசி செலுத்துவதனை உலக சுகாதார ஸ்தாபனம் அங்கீகரித்துள்ளதுடன், ஐரோப்பிய சங்கமும் அங்கீகரித்துள்ளது என்றார்.