April 20, 2024

சுவிஸில் கொரோனா தடுப்பூசி தொடர்பில் வெளியான தகவல்

சுவிஸில் கொரோனா தடுப்பூசி தொடர்பில் வெளியான தகவல்

சுவிட்சர்லாந்தில் போதுமான கொரோனா தடுப்பூசி கிடைக்கும் வரையில் பொது மக்கள் காத்திருக்க நேரிடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சுவிட்சர்லாந்தின் St. Gallen மண்டலமானது கொரோனா தடுப்பூசி வழங்கும் வழிமுறைகள் மற்றும் தயாரிப்பு நிலை குறித்து வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

இதில் ஜனவரி மாதம் முதல் St. Gallen மண்டலத்தில் கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.

முதற்கட்டத்தில் 5,000 பேர்களுக்கு தடுப்பூசி வங்க முடிவு செய்துள்ளதாகவும் முதியவர்களுக்கும் முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்பட உள்ளது.

தொடர்ந்து, சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட உள்ளது. ஆனால் போதுமான தடுப்பூசி கிடைக்கும் வரையில் சாதாரண பொதுமக்கள் காத்திருக்க வேண்டும் எனவும், அதாவது 2021 மே மாதம் வரையில் காத்திருக்க நேரிடும் என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

பிரித்தானியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பைசர் நிறுவனத்தின் தடுப்பூசியை அவசர தேவைக்கு பயன்படுத்தலாம் என அனுமதித்துள்ளனர்.

ஆனால் சுவிஸில் இதுவரை அவ்வாறான முடிவை எடுக்கவில்லை. அதனாலையே, இதுவரை சுவிட்சர்லாந்தில் கொரோனா தடுப்பூசி வழங்கப்படவில்லை.

இருப்பினும் மிக விரைவில் சுவிஸ் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, தடுப்பூசியால் ஏற்படும் பக்கவிளைவுகளுக்கு யார் பொறுப்பு என்ற கேள்விக்கு, கண்டிப்பாக தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமே என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், பொதுமக்களை ஊக்குவிக்கும் நோக்கில் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ஜோ பைடன் பொதுவெளியில் தடுப்பூசி எடுத்துக்கொள்வது போன்று சுவிஸில் எதுவும் அவ்வாறு நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டுமின்றி கொரோனா தடுப்பூசி பெறுவதற்காக பொதுமக்கள் முன்பதிவு செய்யும் தேவை இருக்காது என தெரிவித்துள்ளனர்.

ஆனால், தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னரும், மாஸ்க் அணிவது கட்டாயம் என்றே St. Gallen மண்டல நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்.